Editorial / 2017 ஜூன் 16 , மு.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
18 கிரான்ட் ஸ்லாம்களை வென்ற ரொஜர் பெடரர், ஸ்டட்கார்ட் பகிரங்க டென்னிஸ் தொடரில், முதலாவது சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
உலகின் 302ஆம் நிலை வீரரான, டொமி ஹாஸை எதிர்கொண்ட உலகின் ஐந்தாம் நிலை வீரரான பெடரர், முதலாவது செட்டை, 6-2 என்ற ரீதியில் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டையும் கைப்பற்றும் நிலையில் காணப்பட்ட 35 வயதான பெடரர், பின்னர், டை பிரேக்கர் வரை சென்ற குறித்த செட்டை, 6-7 (8-10) என்றவாறு, 39 வயதான டொமி ஹாஸிடம் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து, தீர்க்கமான மூன்றாவது செட்டில், 6-4 என்ற கணக்கில் வென்ற ஜேர்மனியின் டொமி ஹாஸ், போட்டியை வென்றார்.
இதுவரையில் 17 தடவைகள், சுவிற்ஸர்லாந்தின் பெடரரைச் சந்தித்துள்ள டொமொ ஹாஸ், பெடரரை வெல்லும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற, மியாமி பகிரங்கத் தொடரின் இறுதிப் போட்டியில், தற்போதைய இரண்டாம் நிலை வீரரான, ஸ்பெய்னின் ரஃபேல் நடாலை வென்ற பின்னர், களிமண் தரையின் முழுப் பருவகாலத்தையும் தவறவிட்ட பெடரர், டொமி ஹாஸுடன் விளையாடிய போட்டியே, கடந்த இரண்டு மாதங்களில் அவர் விளையாடிய முதலாவது போட்டியாகும்.
டொமி ஹாஸுடனான போட்டி, இவ்வாண்டு பருவகாலத்தில், பெடரர் தோற்கும் இரண்டாவது போட்டியாகும்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago