2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

முதலாவது டெஸ்டில் 236 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில், தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களை இலங்கை பெற்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் இப்போட்டியானது ஓல்ட் ட்ரஃபோர்ட்டில் புதன்கிழமை (21) ஆரம்பித்திருந்த நிலையில், நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இலங்கை சார்பாக வேகப்பந்துவீச்சாளர் மிலான் ரத்னாயக்க அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, குஸ் அட்கின்ஸன் (2), கிறிஸ் வோக்ஸ் (3), மார்க் வூட், ஷொய்ப் பஷிரிடம் (3) குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும், டி சில்வாவின் 74, ரத்னாயக்கவின் 72, குசல் மென்டிஸின் 24 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 236 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து, முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பென் டக்கெட் 13 ஓட்டங்களுடனும், டான் லோரன்ஸ் ஒன்பது ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .