2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியாவும் ஓட்டங்களைக் குவிப்பு

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 07 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியாவும் ஓட்டங்களைக் குவித்து வருகின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், ராவல்பின்டியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், தமது முதலாவது இனிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 476 ஓட்டங்களைப் பெற்றபோது இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், அஸார் அலி 185, இமாம்-உல்-ஹக் 157, அப்துல்லா ஷஃபிக் 44, அணித்தலைவர் பாபர் அஸாம் 36, மொஹமட் றிஸ்வான் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அணித்தலைவர் பற் கமின்ஸ், நேதன் லையன், மர்னுஸ் லபுஷைன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா, நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், மர்னுஸ் லபுஷைன் 69, ஸ்டீவ் ஸ்மித் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக, உஸ்மான் கவாஜா 97, டேவிட் வோணர் 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், சஜிட் கான், நெளமன் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .