2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

முதலாவது டெஸ்டில் இலங்கையின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவை

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 25 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை வெற்றி பெறுவதற்கு, இறுதி நாளில் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டியுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், அன்டிகுவாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த குறித்த டெஸ்டின் நான்காம் நாளை, தமது இரண்டாவது இனிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இலங்கை, 50 ஓட்டங்களுடன் விரைவாகவே தனஞ்சய டி சில்வாவை அல்ஸாரி ஜோசப்பிடம் பறிகொடுத்தது.

எனினும், பத்தும் நிஸங்க, நிரோஷன் டிக்வெல்லவின் மூலம் டெஸ்டில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிய இலங்கை, ரஹீம் கொர்ன்வோல் (3), கேமார் றோச்சிடம் (1) விக்கெட்டுகளை இழந்தபோதும், சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது இரண்டாவது இனிங்ஸில் 476 ஓட்டங்களை இலங்கை பெற்றது. துடுப்பாட்டத்தில், பத்தும் நிஸங்க 103, நிரோஷன் டிக்வெல்ல 96 ஓட்டங்களைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் 375 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள், நான்காம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

களத்தில், அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட் 8, என்குறுமஹ் பொன்னர் 15 ஓட்டங்களுடனுள்ளனர். விஷ்வ பெர்ணான்டோவிடம் ஜோன் கம்பெல் வீழ்ந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .