Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 13 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று நடைபெற்ற பங்களாதேஷுடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஆரம்பத்திலேயே செளமியா சர்க்காரையும், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோவையும் நசீம் ஷா, மொஹமட் வஸிமிடம் இழந்தது. அடுத்து வந்த லிட்டன் தாஸின் 69 (42), ஷகிப்பின் 68 (42) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றது. பந்துவீச்சில், ஷா 4-0-27-2, வஸிம் 4-0-33-2, ஷடாப் கான் 4-0-31-0, இஃப்திஹார் அஹ்மட் 1-0-7-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 174 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், மொஹமட் றிஸ்வானின் 69 (56), அணித்தலைவர் பாபர் அஸாமின் 55 (40), மொஹமட் நவாஸின் ஆட்டமிழக்காத 45 (20) ஓட்டங்களோடு 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், ஹஸன் மஹ்மூட் 4-0-27-2, செளமியார் சர்க்கார் 1-0-6-1, ஷொரிஃபுல் இஸ்லாம் 4-0-30-0, தஸ்கின் அஹ்மட் 4-0-32-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக றிஸ்வான் தெரிவானார்.
4 minute ago
37 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
37 minute ago
6 hours ago