Mithuna / 2024 ஜனவரி 05 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்று தொடரை ஏற்கெனவே பாகிஸ்தான் இழந்துள்ள நிலையில், சிட்னியில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியின் நேற்றைய இரண்டாம் நாளை விக்கெட் இழப்பின்றி ஆறு ஓட்டங்களுடன் ஆரம்பித்த அவுஸ்திரேலியா 34 ஓட்டங்களுடன் டேவிட் வோர்னரை அக்ஹா சல்மானிடம் இழந்தது.
தொடர்ந்து 47 ஓட்டங்களுடன் உஸ்மான் கவாஜாவை ஆமிர் ஜமாலிடம் இழந்த அவுஸ்திரேலியா, போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக நேற்றைய நாள் முன்னரே முடிவுக்கு வந்தபோது 2 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. களத்தில் மர்னுஸ் லபுஷைன் 23 ஓட்டங்களுடனும், ஸ்டீவன் ஸ்மித் ஆறு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago