2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

முழங்கால் காயத்தால் போட்டிகளைத் தவற விடப் போகும் ஹவேர்ட்ஸ்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான ஆர்சனலின் முன்களவீரரான கை ஹவேர்ட்ஸுக்கு முழங்கால் காயமொன்று ஏற்பட்டதையடுத்து போட்டிகளைத் தவறவிடவுள்ளாரெனக் கூறப்படுகிறது.

புதன்கிழமை (20) பயிற்சியை 26 வயதான ஹவேர்ட்ஸ் தவறவிட்ட நிலையில் அவரது காயம் எவ்வளவு பாரதூரமானதென தெளிவில்லாமலுள்ளது.

ஏற்கெனவே கப்ரியல் ஜெஸூஸும் காயமடைந்துள்ள நிலையில் விக்டர் யோக்கிரிஷ் மாத்திரமே முன்களவீரராகக் காணப்படுகின்றார்.

அந்தவகையில் முன்களவீரரொருவரை கைச்சாத்திட ஆர்சனல் முயலுமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .