2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாடமித்துக்கு முன்னேறினார் மற் ஹென்றி

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 31 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான (ODI) பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் மற் ஹென்றி முன்னேறியுள்ளார்.

பங்களாதேஷுக்கெதிரான மூன்றாவது ODIயில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே, எட்டாமிடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தை ஹென்றி அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ட்ரெண்ட் போல்ட், 2. முஜீப் உர் ரஹ்மான், 3. மற் ஹென்றி, 4. ஜஸ்பிரிட் பும்ரா, 5. மெஹிடி ஹஸன் மிராஸ், 6. கிறிஸ் வோக்ஸ், ககிஸோ றபாடா, 8. ஜொஷ் ஹேசில்வூட், 9. மொஹமட் ஆமிர், 10. பற் கமின்ஸ்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. விராட் கோலி, 2. பாபர் அஸாம், 3. ரோஹித் ஷர்மா, 4. றொஸ் டெய்லர், 5. ஆரோன் பின்ஞ், 6. பப் டு பிளெஸி, 7. ஜொனி பெயார்ஸ்டோ, 8. டேவிட் வோணர், ஷே ஹோப், 10. குயின்டன் டி கொக்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஷகிப் அல் ஹஸன், 2. பென் ஸ்டோக்ஸ், 3. மொஹமட் நபி, 4. கிறிஸ் வோக்ஸ், 5. இமாட் வசீம்.

இந்நிலையில், பங்களாதேஷுக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 92 (52) ஓட்டங்களைப் பெற்ற டெவோன் கொன்வே, இருபதுக்கு – 20 போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில், ஒன்பதாமிடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. டேவிட் மலன், 2. ஆரோன் பின்ஞ், 3. பாபர் அஸாம், 4. டெவோன் கொன்வே, 5. விராட் கோலி, 6. லோகேஷ் ராகுல், 7. றஸி வான் டர் டுஸன், 8. கிளென் மக்ஸ்வெல், 9. மார்டின் கப்தில், 10. ஹஸரத்துல்லா ஸஸாய்.

இதேவேளை, பங்களாதேஷுக்கெதிரான முதலிரண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் டிம் செளதி, ஒன்பதாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. தப்ரையாஸ் ஷம்சி, 2. ரஷீட் கான், 3. அஸ்தன் அகர், 4. அடில் ரஷீட், 5. முஜீப் உர் ரஹ்மான், 6. அடம் ஸாம்பா, 7. டிம் செளதி, 8. இஷ் சோதி, 9. லக்‌ஷன் சந்தகான், 10. மிற்செல் சான்ட்னெர்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மொஹமட் நபி, 2. ஷகிப் அல் ஹஸன், 3. கிளென் மக்ஸ்வெல், 4. றிச்சர்ட் பெரிங்டன், 5. ஷோன் வில்லியம்ஸ்.

இந்நிலையில், இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர் ஜேஸன் ஹோல்டர், டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், 11ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. நீல் வக்னர், 4. ஜேம்ஸ் அன்டர்சன், 5. ஜொஷ் ஹேசில்வூட், 6. டிம் செளதி, 7. ஸ்டூவர்ட் ப்ரோட், 8. ஜேஸன் ஹோல்டர், 9. ககிஸோ றபாடா, 10. மிற்செல் ஸ்டார்க்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. கேன் வில்லியம்ஸன், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. மர்னுஸ் லபுஷைன், 4. ஜோ றூட், 5. விராட் கோலி, 6. பாபர் அஸாம், 7. றிஷப் பண்ட், ஹென்றி நிக்கொல்ஸ், ரோஹித் ஷர்மா, 10. டேவிட் வோணர்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜேஸன் ஹோல்டர், 2. பென் ஸ்டோக்ஸ், 3. இரவீந்திர ஜடேஜா, 4. இரவிச்சந்திரன் அஷ்வின், 5. ஷகிப் அல் ஹஸன்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .