Shanmugan Murugavel / 2021 மார்ச் 03 , மு.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, அன்டிகுவாவில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது இவ்வாண்டு இறுதிப் பகுதியில் இடம்பெறவுள்ள நிலையில் இரண்டு அணிகளும் தம்மை இறுதி செய்து கொள்வதற்கான இறுதி வாய்ப்பாக இத்தொடர் காணப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில் அறிமுகவீரர்களான பத்தும் நிஸங்க, அஷேன் பண்டார மற்றும் இ-20 சர்வதேசப் போட்டிகளில் புதுமுகங்களான ரமேஷ் மென்டிஸ், அசித பெர்ணான்டோ ஆகியோரைப் பரிசோதிப்பதற்கான களமாக இத்தொடர் காணப்படுகின்றது. தவிர, தனது பந்துவீச்சுப்பாணியைத் திருத்தியுள்ள அகில தனஞ்சயவின் தற்போதைய பெறுமதியையும் இலங்கை அறிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கும்.
மறுபக்கமாக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இரண்டாண்டுகளுக்குப் பின்னர் கிறிஸ் கெய்லும், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பிடல் எட்வேர்ட்ஸும் திரும்புவதோடு, டுவைன் பிராவோ ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களால் இன்னமும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு என்னத்தை வழங்க முடியும் என்பதை அவ்வணி அறிந்து கொள்ளக்கூடியதாகவிருக்கும்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஏழாமிடத்தில் இலங்கையும், 10ஆம் இடத்தில் மேற்கிந்தியத் தீவுகளும் இருக்கின்ற நிலையில், தொடரை இழந்தால் 10ஆம் இடத்துக்கு இலங்கை கீழிறங்கும். 2-1 என தொடரை வென்றால் எட்டாமிடத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் முன்னேறுவதோடு, 3-0 என வெள்ளையடித்தால் ஏழாமிடத்துக்கு முன்னேறும்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago