2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வென்ற நியூசிலாந்து

Editorial   / 2025 நவம்பர் 16 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது.

கிறைஸ்ட்சேர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஷாய் ஹோப், நியூசிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, டரைல் மிற்செல்லின் 119 (118), டெவொன் கொன்வேயின் 49 (58), மிஷெல் பிறேஸ்வெல்லின் 35 (52), ஸகரி போக்ஸின் ஆட்டமிழக்காத 22 (16) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 269 ஓட்டங்களப் பெற்றது. பந்துவீச்சில், ஜேடன் சியல்ஸ் 3, மத்தியூ போர்டே 2, றொஸ்டன் சேஸ் மற்றும் ஜஸ்டின் கிறேவ்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு 270 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் 55 (61), கிறேவ்ஸ் ஆட்டமிழக்காமல் 38 (24), ஹோப் 37 (45), கேசி காட்டி 32 (67), அலிக் அதனஸே 29 (58), றொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டமிழக்காமல் 26 (19) ஓட்டங்களைப் பெற்றபோதும் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களையே பெற்று எட்டு ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் கைல் ஜேமிஸன் 3, போக்ஸ், மற் ஹென்றி, மிற்செல் சான்ட்னெர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக மிற்செல் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .