2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பங்களாதேஷ்: தொடர் சமநிலையானது

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 04 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் வென்ற நிலையில், ஜமைக்காவில் சனிக்கிழமை (30) ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை (03) முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியை பங்களாதேஷ் வென்ற நிலையிலேயே தொடர் 1-1 என்ற நிலையில் சமநிலையில் முடிவடைந்தது.

நான்காம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ், அல்ஸாரி ஜோசப் (2), கேமார் றோச்சிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் ஜாகிர் அலியின் 91 ஓட்டங்களை சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 287 ஓட்டங்களை தமது இரண்டாவது இனிங்ஸில் வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட் 43, கவெம் ஹொட்ஜ் 55 ஓட்டங்களைப் பெற்றபோதும் தஜியுல் இஸ்லாம் (5), தஸ்கின் அஹ்மட் (2), ஹஸன் மஹ்மூட் (2), நஹிட் ரானாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களையே பெற்று 101 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக தஜியுல் இஸ்லாமும், தொடரின் நாயகர்களாக தஸ்கின் அஹ்மட்டும், ஜேடன் சியல்ஸும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .