2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

மொன்ஸாவிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

Mithuna   / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மொன்ஸாவின் மைதானத்தில் திங்கட்கிழமை (19) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான ஏ.சி மிலன் தோற்றது.

மிலன் சார்பாக, ஒலிவியர் ஜிரூட், கிறிஸ்டியன் புலிசிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மொன்ஸா சார்பாக மட்டியோ பெஸினா, டனி மோட்டா, வரென் பொன்டோ, லொரென்ஸோ கொலொம்போ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற பொலொக்னாவுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் லேஸியோ தோற்றது.

சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 63 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலனும், 54 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஜுவென்டஸும், 52 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஏ.சி மிலனும் உள்ளன. அத்லாண்டாவும், பொலொக்னாவும் தலா 45 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் நான்காம், ஐந்தாமிடங்களிலுள்ளன. இதில் இன்டர் மிலனும், அத்லாண்டாவும் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X