2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மோதலையடுத்து குமார, தாஸுக்கு அபராதம்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் மோதிய இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, பங்களாதேஷின் துடுப்பாட்டவீரர் லிட்டன் தாஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் நடத்தைக் கோவையில் முதலாவது கட்டத்தை மீறியதற்காக குமாரவின் போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், தாஸுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அபராதங்களுக்கு மேலாக இருவருக்கும் ஒரு தண்டப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .