2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

யுனைட்டெட்டுக்கு மீளத் திரும்பும் ரொனால்டோ?

Shanmugan Murugavel   / 2021 மே 30 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஒப்பந்தம் செய்வது குறித்து அவரின் முன்னாள் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் ஆராய்வதாகக் கூறப்படுகிறது.

யுனைட்டெட்டின் மத்தியகளவீரரான போல் பொக்பாவை ஒப்பந்தம் செய்வதற்குப் பதிலாக 36 வயதான ரொனால்டோவை ஜுவென்டஸ் வழங்கத் தயாராகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரொனால்டோவும், 28 வயதான பொக்பாவும் தத்தமது கழகங்களுடன் இன்னும் ஓராண்டைக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .