2024 மே 08, புதன்கிழமை

யுனைட்டெட்டை வீழ்த்திய சிற்றி

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 08 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.

சிற்றி சார்பாக, கெவின் டி ப்ரூனே, றியாட் மஹ்ரேஸ் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றதோடு, யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜடோன் சஞ்சோ பெற்றிருந்தார்.

அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 69 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் சிற்றி காணப்படுகின்றது. ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள லிவர்பூல், 63 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள செல்சி 53 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், மூன்று போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள ஆர்சனல் 48 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X