Shanmugan Murugavel / 2021 மே 14 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.
லிவர்பூல் சார்பாக, றொபெர்ட்டோ பெர்மினோ இரண்டு கோல்களையும், டியகோ ஜோட்டா, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். யுனைட்டெட் சார்பாக, புரூனோ பெர்ணான்டஸ், மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, அஸ்டன் வில்லாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், எவெர்ற்றனுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில், சம்பியனான மன்செஸ்டர் சிற்றி 80 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் காணப்படுகின்றது. 70 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் யுனைட்டெட்டும், 66 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றியும், 64 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செல்சி காணப்படுகின்றது.
36 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago