Shanmugan Murugavel / 2021 ஜூன் 13 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரில், நேற்று நடைபெற்ற பின்லாந்துடனான போட்டியில் டென்மார்க்கின் மத்தியகள வீரரான கிறிஸ்டியன் எரிக்ஸன் நிலைகுலைந்து வீழ்ந்திருந்தார்.
டென்மார்க்கில் நடைபெற்ற குறித்த போட்டியின்போது களத்தில் வைத்தே எரிக்ஸனுக்கு செயற்கைச் சுவாசமளிக்கப்பட்டிருந்ததுடன், வைத்தியசாலைக்கு பின்னர் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில், எரிக்ஸன் நிலையாக இருப்பதாகவும், நினைவுக்கு வந்து எழும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த போட்டியானது இச்சம்பவத்துடன் இடைநிறுத்தப்பட்டு பின்னர் ஆரம்பித்த நிலையில், ஜோயல் பொஹ்ஜன்பாலோ பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் பின்லாந்து வென்றிருந்தது.
32 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
3 hours ago