2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ரியல் மட்ரிட் ஒரு ஒற்றுமையான கழகம்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடுகளத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சில கடினமான வாரங்களைக் கொண்டிருந்தாலும் ரியல் மட்ரிட் ஒற்றுமையான கழகம் என அக்கழகத்தின் முன்கள வீரரும் வேல்ஸ் தேசிய அணியின் முன் கள வீரருமான கரித் பலே தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் தமது வைரிகளான பார்சிலோனாவிடம் அடைந்த பாரிய தோல்வி, முறையற்ற வீரர் ஒருவரை அணியில் கொண்டிருந்தமையை அடுத்து கோபா டெல் ரே கிண்ணத்திலிருந்து வெளியேற்றப்பட்டமையால் ரியல் மட்ரிட் கழகம் துவண்டு போயிருந்தது.

எனினும் தமது இறுதி லா லிகா போட்டியில் கெடாபே அணியுடான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் அட்லெட்டிகோ மட்ரிட் அணியை பின்தள்ளி இரண்டாமிடத்துக்கு முன்னேறியதுடன், முதலாவது இடத்திலுள்ள பார்சிலோனா அணியை விட நான்கு புள்ளிகளே குறைவாக உள்ளது.

இந்த நிலையிலேயே, முக்கிய விடயம் எதுவெனில், அணி ஒற்றுமையாக இருப்பதாகவும், அதனால் நாங்கள் போட்டிகளை வெல்ல முடியும், ஒவ்வொரு நாளும் இன்னும் சிறப்பாக முடியும் என பலே தெரிவித்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .