Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையில் இடம்பெற்று வரும் லா லிகாத் தொடரின், கடந்த புதன்கிழமை (30) இடம்பெற்ற போட்டிகளில் ரியல் மட்ரிட், பார்சிலோனா ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
ரியல் மட்ரிட் கால்பந்தாட்டக் கழகத்துக்கும் ரியல் சொஸைடட் கால்பந்தாட்டக் கழகத்துக்மிடையே இடம்பெற்ற போட்டியில் ரியல் மட்ரிட் கால்பந்தாட்டக் கழகம், 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
ரியல் மட்ரிட் அணி சார்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, முன்னர் ஒரு பனால்டியைத் தவறவிட்டிருந்தாலும் 42ஆவது நிமிடத்தில் பனால்டி மூலம் ஒரு கோலையும் 67ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் பெற்றிருந்ததோடு, 86ஆவது நிமிடத்தில் லூகாஸ் வஸ்கூஸ் ஒரு கோலையும் பெற்றிருந்தார். ரியல் சொஸைடட் அணி சார்பாக பெறப்பட்ட கோலை புரூமா பெற்றிருந்தார்.
இதேவேளை பார்சிலோனா கால்பந்தாட்டக் கழகத்துக்கும் ரியல் பெட்டிஸ் கால்பந்தாட்டக் கழகத்துக்மிடையிலான போட்டியில் பார்சிலோனா கால்பந்தாட்டக் கழகம், 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்த வருடத்தை லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துடன் முடித்துக் கொண்டது.
இப்போட்டியில் 500ஆவது தடவையாக பார்சிலோனாவுக்காக பங்கேற்ற மெஸ்ஸி, தனது 425ஆவது கோலைப் பெற்றார். தவிர, லூயிஸ் சுவரேஸ் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, ஒரு கோல் ஒவ்ண் கோல் முறையில் கிடைத்திருந்தது.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago