Shanmugan Murugavel / 2016 ஜனவரி 05 , மு.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழகமான ரியல் மட்ரிட்டின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து, ரஃபேல் பெனிட்ஸ் ஏழே மாதங்களில் நீக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு பதிலாக ரியல் மட்ரிட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான ஸினேடி ஸிடான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரியல் மட்ரிட்டின் பணிப்பாளர் சபையுடன் கடந்த திங்கட்கிழமை (04), இடம்பெற்ற சந்திப்பையடுத்தே 55 வயதான ஸ்பெயின் நாட்டவரான பெனிட்ஸ், பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக, ரியல் மட்ரிட் பி அணியின் பயிற்சியாளரான 43 வயதான பிரெஞ் நாட்டவரான ஸிடான் முதற்தர அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தப் பதவியில் தனது இதயத்தையும் உயிரையும் வைக்கப் போவதாகவும் எனவே அனைத்தும் நன்றாக இருக்கும் என உலகக்கிண்ண வெற்றியாளரான ஸிடான் தெரிவித்தார்.
பெனிட்ஸின் இறுதிப்போட்டியில் ரியல் மட்ரிட், 2-2 என்ற கோல் கணக்கில் வலென்சியாவுடன் போட்டியை சமநிலையில் முடித்து, லா லிகாத் தொடருக்கான புள்ளிகள் தரவரிசையில், முதலிடத்தில் உள்ள அட்லெட்டிகோ மட்ரிட்டை விட நான்கு புள்ளிகள் குறைவாகப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (09) டெபோர்டிவோ லா கொரௌனாவுடான, சொந்த மைதானத்தில் இடம்பெறும் லா லிகாப் போட்டிக்கே ஸிடான், முதன்முறையாக அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
பெனிட்ஸ் ஏன் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கபோதும், கடந்த நவம்பர் மாதம் பார்சிலோனாவுடான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தமை, அவரது தடுப்பாட்ட உபாயங்கள் விமர்சிக்கப்பட்டமை, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடான முரண்பாடு என்று வெளியான தகவல்கள் காரணமாயிருக்கலாம் என நம்பப்படுகிறது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago