Shanmugan Murugavel / 2015 நவம்பர் 24 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பார்சிலோனாவிடம் 4-0 என்ற ரீதியில் சொந்த மைதானத்தில் ரியல் மட்ரிட் தோல்வியடைந்த பின்னரும், அக்கழகத்தின் ஆதரவு, அக்கழகத்தின் பயிற்சியாளர் ரஃபேல் பெனிட்ஸுக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கோடை காலத்திலேயே முன்னைய பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டியை, 55 வயதான பெனிட்ஸ் பிரதீயீடு செய்திருந்தார். எனினும், பார்சிலோனா அணியுடன் பெற்ற தோல்வியை அடுத்து, ரியல் மட்ரிட் அணியின் ஆதரவாளர்கள், பெனிட்ஸை பதவியிலிருந்து அகற்றுமாறு கோஷமெழுப்பியிருந்தனர்.
இந்த நிலையிலேயே, இடம்பெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத்தையடுத்து, கருத்து தெரிவித்த ரியல் மட்ரிட் கழகத் தலைவர் புளோரென்டினோ பெரேஸ், பெனிட்ஸூக்கு, தங்களது அனைத்து ஆதரவும் நம்பிக்கையும் காணப்படுவதாக கூறியுள்ளார்.
தற்போதே பெனிட்ஸ் தனது பணியைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்த பெரேஸ், அவரை, அவரின் குறிக்கோளை அடைய விடுமாறும் தெரிவித்தார். எனினும், தற்போதைய நிலையைப் பற்றியே தான் கதைப்பதாகவும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தன்னால் கூறமுடியாது என்றும், ஆறு மாதத்தில் என்ன நடக்கும் என்று எவராலும் கூற முடியாது என தெரிவித்தார்.
இதேவேளை, ரியல் மட்ரிட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெனிட்ஸுக்கு கீழ் விளையாடுவதில் மகிழ்ச்சியாகவில்லை என்று தெரிவித்ததாக வெளியான கருத்துக்களை பெரேஸ் மறுத்திருந்ததோடு, பெனிட்ஸை பற்றி ரொனால்டோ தன்னிடம் ஒருபோதும் எதனையும் கூறவில்லை எனத் தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு கழகத்தின் தலைவராக இருந்து இராஜினாமா செய்து, பின்னர் மீண்டும் 2009ஆம் ஆண்டு கழகத்தின் தலைவராக பதவியேற்ற பெரேஸும், கோபமடைந்த இரசிகர்களினால் இலக்காகியிருந்தார்.
பார்சிலோனா அணியிடம் தோல்வியைத் தழுவிய ரியல் மட்ரிட் அணி, புள்ளிகள் தரவரிசையில் பார்சிலோனா அணியை விட 6 புள்ளிகள் பின்தங்கியுள்ளதோடு, அட்லெட்டிக்கோ அணியை விட 2 புள்ளிகள் பின்தங்கியுள்ளது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago