2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ரஷ்ய ஊக்கமருந்துத் தடை முகவராண்மைக்கு தடை

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 19 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் ஊக்கமருந்துத் தடை முகவராண்மை, உலக ஊக்கமருந்துத் தடை முகவராண்மையால் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஊக்க மருந்து தொடர்பான சுயாதீன அறிக்கையில், ஊக்க மருந்து தொடர்பாக ரஷ்யாவின் நடவடிக்கைகளை விமர்சித்ததோடு, கடந்த ஒலிம்பிக் போட்டிகளில், ஊக்க மருந்துப் பாவனையை மேற்கொண்ட தடகள வீரர்கள் பங்குபற்றியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் தடகளச் சம்மேளனம், தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, உலக ஊக்கமருந்துத் தடை முகவராண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது, ரஷ்யாவின் ஊக்க மருந்து முகவராண்மையைத் தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, ஏகோபித்த முடிவாக அமைந்தது என அறிவிக்கப்படுகிறது.

உலக ஊக்கமருந்துத் தடை முகவராண்மையுடன் இணைந்து செயற்படாததன் காரணமாக, ரஷ்யாவின் ஊக்கமருந்துத் தடை முகவராண்மை, உடனடியாகத் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

அன்டோரா, இஸ்ரேல், ஆர்ஜென்டினா, பொலிவியா, உக்ரைன் ஆகிய நாடுகளும், ஒத்துழைக்காத நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், அவைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை.

பெல்ஜியம், பிரேசில், பிரான்ஸ், கிரேக்கம், மெக்ஸிக்கோ, ஸ்பெய்ன் ஆகியன, ஒத்துழைப்புத் தொடர்பான கவனப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, இருக்கும் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு, நான்கு மாதங்களைக் கால அவகாசமாகப் பெற்றுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .