2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

றொட்னி மார்ஷின் இடத்தைப் பிடிக்க கிலெஸ்பியும் வோவும் ஆர்வம்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 18 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டுடன் நிறைவடையவுள்ள தனது பதவிக் காலத்துக்குப் பின்னர், தனது பதவியில் நீடிக்கப் போவதில்லை என அறிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளர் றொட்னி மார்ஷின் இடத்தைப் பிடிப்பதற்கு, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் யோர்க்‌ஷையர் அணியின் முன்னாள் பயிற்றுநருமான ஜேஸன் கிலெஸ்பி ஆகியோர் ஆர்வம் வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில், அதிக மதிப்பைக் கொண்ட தலைவர்களில் ஒருவரான ஸ்டீவ் வோவின் சகோதரர் மார்க் வோ, தேர்வுக் குழாமில் ஏற்கெனவே காணப்படுகிறார். இந்நிலையிலேயே, பிரதம தேர்வாளர் பதவிக்குக்குத் தன்னிடம் கோரப்பட்டால், அதுகுறித்துக் கேட்டறிவதற்கு ஆர்வமாக இருப்பதாக, வோ தெரிவித்தார்.

மறுபக்கமாக கிலெஸ்பி, தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். யோர்க்‌ஷையர் அணிக்கு 5 ஆண்டுகளாகப் பயிற்றுவித்துவிட்டு, இவ்வாண்டுடன் ஓய்வுபெற்றுள்ள கிலெஸ்பி, தற்போதைக்கு, பிக்பாஷ் லீக் தொடரில் அடிலெய்ட் அணியின் பயிற்றுநராகச் செயற்படவுள்ளார். இந்நிலையிலேயே, அணித் தேர்வாளர் பதவிக்கு, விண்ணப்பிக்கும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்திய அவர், கடந்த 5 ஆண்டுகளாக, யோர்க்‌ஷையர் அணிக்காக அணிகளைத் தெரிவுசெய்தமையே, தான் செய்த பணி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

றொட்னி மார்ஷின் பதவிக் காலத்தில், 2015ஆம் ஆண்டு ஆஷஷ் தொடரைத் தோற்ற அவுஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் வைத்து, உலகக் கிண்ணத்தை வென்றதோடு, டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை, ஆறு மாதங்களுக்குத் தக்க வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .