2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

றியல் மட்ரிட், சிற்றி வெற்றி

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், முக்கியமான போட்டியாக அமைந்த மன்செஸ்டர் போட்டி தவிர ஏனைய போட்டிகளில், றியல் மட்ரிட் அணியும் மன்செஸ்டர் சிற்றி அணியும் வெற்றிபெற்றன.

றியல் மட்ரிட் அணிக்கும் மல்மோ அணிக்குமிடையிலான போட்டியில், 8-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றது.

இப்போட்டியில், 12ஆவது, 24ஆவது நிமிடத்தில் கரிம் பென்ஷெமா பெற்றுக் கொண்ட கோல்களின் உதவியோடு, 2-0 என றியல் மட்ரிட் அணி முன்னிலை வகிக்க, 39ஆவது, 47ஆவது, 50ஆவது, 59ஆவது நிமிடங்களில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோல்களைப் பெற்றுக் கொடுத்தார். அண்மைக்காலமாக கோல்களைப் பெறத் தடுமாறிவரும் ரொனால்டோ, சிறப்பான திறமையை வெளிப்படுத்திய போட்டியாக இது அமைந்தது.

தொடர்ந்து, 70ஆவது நிமிடத்தில் மாட்டோ கொவசிச், 74ஆவது நிமிடத்தில் கரிம் பென்ஸெமா பெற்ற கோல்களின் உதவியுடன், 8-0 என்ற கோல் கணக்கிலான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

மன்செஸ்டர் சிற்றி அணிக்கும் பொருஸியா மொயின்சென்கிளட்பச் அணிக்குமிடையிலான போட்டியில், சிற்றி அணிக்கு 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கிடைத்தது.

சிற்றி சார்பாக 16ஆவது நிமிடத்தில் டேவிட் சில்வா, 80ஆவது, 82ஆவது நிமிடங்களில் றஹீம் ஸ்டேர்லிங், 85ஆவது நிமிடத்தில் வில்பிரட் பொனி ஆகியோர் கோல்களைப் பெற்றனர். பொருஸியா சார்பாக 19ஆவது நிமிடத்தில் ஜுலியன் கோர்ப், 43ஆவது நிமிடத்தில் றபேல் ஆகியோர் கோல்களைப் பெற்றுக் கொடுத்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .