2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

றியல் மட்ரிட் - பார்சிலோனா போட்டி நிர்ணயம் குறித்து விசாரணை

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 22 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நியல் மட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கிடையிலான போட்டி, நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வெளியான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த போட்டிக்காக நியமிக்கப்பட்டுள்ள உதவி அதிகாரியொருவர், அப்போட்டியில் றியல் மட்ரிட் கழகத்துக்குச் சார்பாகச் செயற்படுமாறு அழுத்தத்துக்குள்ளாக்கப்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததையடுத்தே, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதாக, ஸ்பானிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறித்த விசாரணை குறித்த அறிக்கையின்படி, ஜோஸ் அங்கெல் ஜிமெனெஸ் முனோஸ் டி மொராலஸ் என்ற, மத்தியஸ்தர்களுக்கான ஸ்பானிய தொழில்நுட்பச் செயற்குழுவின் உறுப்பினரே, இவ்வாறு அழுத்தங்களை முன்வைத்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

அழுத்தத்துக்குள்ளாக்கப்பட்ட அதிகாரிக்கு, கடந்த செப்டெம்பரிலேயே ஜோஸ் அங்கெலிடமிருந்து தொலைபேசி அழைப்புக் கிடைக்கப்பெற்றதாகவும், உள்பக்கத்திலுள்ள ஒருவரிடமிருந்து பணிப்புரை கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்திருந்தார்.

றியல் மட்ரிட் கழகத்துக்கும் பார்சிலோனாவுக்குமிடையில் வருடாந்தம் இடம்பெறும் போட்டிகள், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவனாகக் காணப்படும் நிலையில், தற்போது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .