Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 27 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பிக் பாஷ் தொடரில், மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சகலதுறை வீரர் அன்றே றசலின் கறுப்பு துடுப்பு மட்டையை பயன்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மீளவும் அனுமதி வழங்கியுள்ளது.
பந்தைப் பாதுகாக்க உதவும் தெளிவான மேற்புற அட்டை சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்தே, பிக் பாஷ் தொடரில், அன்றே றசலின் கறுப்புத் துடுப்பு மட்டையைப் பயன்படுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அனுமதியளித்துள்ளது.
பிக் பாஷ் தொடரில், சிட்னி தண்டேர்ஸ் அணியின் முதலாவது போட்டியில் கறுப்புத் துடுப்பு மட்டையை அன்றே றசல் பயன்படுத்தியிருந்தபோதும், குறித்த துடுப்பு மட்டையால் பந்தில் கறுப்பு அடையாளங்கள் ஏற்படுகின்றன என்ற போட்டி அதிகாரிகளின் பின்னூட்டத்தைத் தொடர்ந்து, குறித்த துடுப்பாட்ட மட்டைக்கான அனுமதியை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மீளப்பெற்றிருந்தது.
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago