2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

றியல் மட்ரிட் செல்கிறார் சந்தேஸ்?

Editorial   / 2017 நவம்பர் 23 , பி.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் முன்கள வீரரான அலெக்ஸிஸ் சந்தேஸ், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டால் ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சனலுடனான அலெக்ஸ் சந்தேஸின் ஒப்பந்தம் நடப்பு பருவகாலத்துடன் முடிவடைகிலேயே, றியல் மட்ரிட்டால் ஒப்பந்தம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, றியல் மட்ரிட்டால் அலெக்ஸிஸ் சந்தேஸ் ஒப்பந்தம் செய்யப்படுமிடத்து, அடிக்கடி உபாதைக்குள்ளாகும் முன்கள வீரர் கரித் பேலை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான மன்செஸ்டர் யுனைட்டெட் அல்லது டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருக்கு றியல் மட்ரிட் விற்பதுடன் தனக்கு தேவையான பணத்தை கொண்டு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்கள வீரர் ஹரி கேனை வாங்க முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .