Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை மீண்டும் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்கு கொண்டு வர விரும்பியதை றியல் மட்ரிட்டின் முகாமையாளர் கார்லோ அன்சிலோட்டி மறுத்துள்ளார்.
றியல் மட்ரிட்டுக்கு ரொனால்டோ திரும்பவிருக்கின்றார் என ஊகங்கள் வெளியான நிலையிலேயே இக்கருத்தை அன்சிலோட்டி வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, றியல் மட்ரிட்டுக்கு ரொனால்டோ திரும்புவதை இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் றியல் மட்ரிட்டின் தலைவர் புளோரென்டினோ பெரேஸ் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி ஆகியவற்றுடனும் ரொனால்டோவை இணைத்துக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இச்சந்தர்ப்பத்தில், ஏதாவது நகர்வொன்றை ரொனால்டோ மறுக்கவோ அல்லது ஜுவென்டஸுல் தொடருவதாகவோ உறுதியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago