Shanmugan Murugavel / 2021 ஜூன் 02 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட், முன்னாள் முகாமையாளர் கார்லோ அன்சிலோட்டி கழகத்துக்கு முகாமையாளராகத் திரும்பியமையை அறிவித்துள்ளது.
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான எவெர்ற்றனிலிருந்து விலகுவதை அன்சிலோட்டி உறுதிப்படுத்தியையடுத்தே மேற்குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
றியல் மட்ரிட்டுடன் மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில் அன்சிலோட்டி இணங்கியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை றியல் மட்ரிட்டின் முகாமையாளராகக் காணப்பட்ட அன்சிலோட்டி, ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக், சுப்பர் கிண்ணம், கோப்பா டெல் ரே, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத்தை வென்றிருந்தார்.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago