Shanmugan Murugavel / 2021 மே 13 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், சம்பியனான இன்டர் மிலனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், றோமாவுக்குமிடையிலான போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது.
இன்டர் மிலன் சார்பாக, மார்செலோ பிறோஸோவிச், மத்தியாஸ் வெசினோ, றொமெலு லுக்காக்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹென்றிச் மிகித்திரயான் பெற்றிருந்தார்.
அந்தவகையில், சீரி ஏ புள்ளிகள் பட்டியலில், ஏற்கெனவே சம்பியனான இன்டர் மிலன் 88 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் காணப்படுகின்றது. 75 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் அத்லாண்டாவும், அதே புள்ளிகளுடன் கோலெண்ணிக்கை வித்தியாசம் காரணமாக மூன்றாமிடத்தில் ஏ.சி மிலனும், 73 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நாப்போலியும் காணப்படுகின்றது.
36 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago