Shanmugan Murugavel / 2016 நவம்பர் 07 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், பார்சிலோனா ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
றியல் மட்ரிட், லெகானிஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றது. றியல் மட்ரிட் சார்பாக, கரித் பேல் இரண்டு கோல்களையும் அல்வரோ மொராட்டோ ஒரு கோலினையும் பெற்றனர்.
பார்சிலோனா, செவில்லா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது. முதற்பாதியின் 15ஆவது நிமிடத்திலேயே விட்டோலோவின் கோலின் மூலம் செவில்லா முன்னிலை பெற்றபோதும், முதற்பாதி முடிவடைய இரண்டு நிமிடங்கள் இருக்கையில், 18 யார் தூரத்திலிருந்து அபாரமாக கோலொன்றினைப் பெற்ற லியனல் மெஸ்ஸி, கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். பின்னர், போட்டியின் 61ஆவது நிமிடத்தில், மெஸ்ஸியிடமிருந்து பந்தைப் பெற்ற லூயிஸ் சுவாரஸ் பெற்ற கோலின்மூலம் பார்சிலோனா வெற்றி பெற்றது.
இவ்வாரயிறுதி போட்டிகளின் முடிவில், 27 புள்ளிகளைப் பெற்றுள்ள றியல் மட்ரிட், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலாமிடம் வகிப்பதோடு, 25 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா, தரவரிசையில் இரண்டாமிடம் வகிக்கிறது.
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026