Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜனவரி 19 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், லெகனிஸின் மைதானத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.
லெகனிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை மடிஜா நஸ்டசிச் பெற்றிருந்தார்.
இதேவேளை கெட்டாஃபேயின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா சமப்படுத்தியது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜூலெஸ் கூன்டே பெற்றதோடு, கெட்டாஃபே சார்பாகப் பெறப்பட்ட கோலை மெளரோ அரம்பரி பெற்றிருந்தார்.
லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 44 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ உள்ளது. 43 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டும், 39 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பார்சிலோனாவும், 36 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிக் பில்பாவோவும் காணப்படுகின்றன. இதில் றியல் மட்ரிட்டும், அத்லெட்டிக் பில்பாவோவும் ஏனைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
27 Jun 2025