2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

லெய்ப்ஸிக்கை வென்ற பயேர்ண் மியூனிச்

Mithuna   / 2024 பெப்ரவரி 26 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லிகா தொடரில், தமது மைதானத்தில் நடைபெற்ற ஆர்.பி லெய்ப்ஸிக்குடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சம்பியன்களான பயேர்ண் மியூனிச் வென்றது.

மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஹரி கேன் பெற்றதோடு, லெய்ப்ஸிக் சார்பாகப் பெறப்பட்ட கோலை பெஞ்சமின் ஸெஸ்கோ பெற்றிருந்தார்.

புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 61 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பயேர் லெவர்குசன் உள்ளது. 53 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மியூனிச்சும், 47 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் வி.எஃப்.பி ஸ்டட்கார்ட்டும், 41 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் பொரூசியா டொட்டமுண்டும் உள்ளன. இதில் டொட்டமுண்ட் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X