2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

லெய்ப்ஸிக்கை வென்ற லெவர்குசன்

Mithuna   / 2024 ஜனவரி 22 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் பயேர் லெவர்குசன் வென்றது.

லெவர்குசன் சார்பாக, நாதன் டெல்லா, ஜொனதன் தஹ், பியர்ரோ ஹின்கபி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லெய்ப்ஸிக் சார்பாக ஸ்கெவி சிமொன்ஸ், லொய்ஸ் ஒபென்டா ஆகியோர் தாலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 48 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லெவர்குசன் உள்ளது. இரண்டாமிடத்தில் 41 புள்ளிகளுடன் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச்சும், 34 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் வி.எஃப்.பி ஸ்டட்கார்ட்டும், 33 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லெய்ப்ஸிக்கும் காணப்படுகின்றன. பொரூசியா டொட்டமுண்டும் 33 புள்ளிகளுடன் உள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் ஐந்தாமிடத்திலுள்ளது. இதில் மியூனிச் இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .