Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 25 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும் ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்குமிடையிலான குழு எச் போட்டியொன்றில் 1-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது.
பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை நெய்மர் பெற்றிருந்தார்.
இதேவேளை, தொடரின் விலகல் முறையிலான சுற்றுக்கு ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா, செவில்லா, இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி ஆகியன தகுதிபெற்றுள்ளன.
உக்ரேனியக் கழகமான டைனமோ கிவ்வின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஜி போட்டியொன்றமையைத் தொடர்ந்தே பார்சிலோனா விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. பார்சிலோனா சார்பாக, மார்டின் பிறைத்வெய்ட் இரண்டு கோல்களையும், சேர்ஜினோ டெஸ்ட், அந்தோனி கிறீஸ்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
தமது மைதானத்தில் நடைபெற்ற ஹங்கேரியக் கழகமான பிறன்ஸ்ஸாருஸுடனான இன்னொரு குழு ஜி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே ஜுவென்டஸ் விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்றது. ஜுவென்டஸ் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல்வரோ மொராட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பிறன்ஸ்ஸாருஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை மைர்டோ உஸுனி பெற்றிருந்தார்.
இதேவேளை, ரஷ்யக் கழகமான கிறாஸ்னொடாரில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஈ போட்டியொறில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றமையத் தொடர்ந்து விலகல் முறையிலான சுற்றுக்கு செவில்லா தகுதிபெற்றிருந்தது. செவில்லா சார்பாக, இவான் றகிடிச், முனிர் எல் ஹடாடி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கிறாஸ்னொடர் சார்பாகப் பெறப்பா கோலை வன்டர்சன் மசியெல் ஸூஸா கம்பொஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில், பிரெஞ்சு லீக் 1 கழகமான றெனிஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான இன்னொரு குழு ஈ போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற செல்சியும் விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்றது. செல்சி சார்பாக, கலும் ஹட்ஸன் ஒடோய், ஒலிவியர் ஜிரூட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். றெனிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை செர்தெள குய்ரஸி பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago