Gopikrishna Kanagalingam / 2017 மே 10 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜுவென்டஸ் அணியின் போல் பொக்பாவை, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகம், உலக சாதனைத் தொகைக்குப் பரிமாற்றம் செய்தமை, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஓகஸ்ட் மாதத்தில், 89 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு, பொக்பா, ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
குறித்த ஒப்பந்தம் தொடர்பான தெளிவைப் பெறும்பொருட்டு, யுனைட்டெட் கழகத்துக்கு, சம்மேளனத்தால் கடிதமொன்று அனுப்பப்பட்டது.
ஜேர்மனியில் இவ்வாரம் வெளியிடப்பட்ட புத்தமொன்று, கால்பந்தாட்டத்தின் இரகசியத் தகவல்களை வெளியிடுவதாகத் தெரிவித்தது. அதில், பொக்பாவின் ஊதியத்தை விவரமாகக் குறிப்பிட்ட அந்தப் புத்தகம், அவரது முகவரான மினோ றையோலா, 41 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களை, இந்த ஒப்பந்தம் மூலமாகப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்திருந்தது.
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago