2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

வோஜஸ், லயன், நெவிலுக்கு வெட்டு?

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 15 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணிக்கெதிரான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் விளையாடும் பதினொருவரில், நேற்று முடிந்த போட்டியில் பங்குபற்றியவர்களில் நால்வர் மாத்திரமே உறுதியாகப் பங்குபற்றுவர் என, பயிற்றுநர் டெரன் லீமன் தெரிவித்துள்ளார்.

அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், உப தலைவர் டேவிட் வோணர், வேகப்பந்து வீச்சாளர்களான மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸல்வூட் ஆகியோரே, இவ்வாறு பாதுகாப்பாக உள்ள வீரர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தவிர, இப்போட்டியில் விளையாடிய பதினொருவரில் வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டார்க், ஹேஸல்வூட், ஜோ மெனி ஆகியோரைத் தவிர ஏனைய அனைவரும், ஷெபீல்ட் ஷீல்ட் போட்டிகளில், 3ஆவது டெஸ்ட்டுக்கு முன்பாகப் பங்குபற்றவுள்ளனர்.

அணியிலிருந்து நீக்கப்படுவதற்கு ஆகக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ள வீரர்களாக, சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன், துடுப்பாட்ட வீரர் அடம் வோஜஸ் ஆகியோர் கருதப்படுவதோடு, விக்கெட் காப்பாளர் பீற்றர் நெவிலும், தனது இடத்தைப் பறிகொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியில் சேர்க்கப்படக்கூடிய வாய்ப்புள்ள வீரர்களாக கேர்ட்டிஸ் பற்றெர்சன், ட்ரவிஸ் ஹெட் ஆகியோரோடு, லீமனின் மகனான ஜேக் லீமனும் கருதப்படுகிறார். தனது மகனைச் சேர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றால், அக்கூட்டத்திலிருந்து வெளியேறி, ஏனைய தேர்வாளர்கள் முடிவெடுக்க அனுமதிக்கப் போவதாக, டெரன் லீமன், இதன் போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .