Shanmugan Murugavel / 2016 ஜூன் 22 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசைகள் (seeds) வெளியிடப்பட்டுள்ளன. ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர் போட்டிகளுக்கான தரவரிசைகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, உலகின் முதல் 3 வீரர்களான நொவக் ஜோக்கோவிச், அன்டி மரே, ரொஜர் பெடரர் ஆகியோர், முதல் 3 தரவரிசைகளையும் பெற்றுள்ளனர். 4ஆம் நிலை வீரரான ரபேல் நடால், இத்தொடரில் பங்குபெற மாட்டார் என்பதால், 5ஆம் நிலை வீரரான ஸ்டான் வவ்றிங்கா, 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
5ஆவது இடத்தில் ஜப்பானின் கீ நிஷிகோரியும் 6ஆவது இடத்தில் கனடாவின் மிலோஸ் றாவோனிக்கும் 7ஆவது இடத்தில் பிரான்ஸின் றிச்சர்ட் கஸ்கட்டும் காணப்படுகின்றனர்.
பெண்களுக்கான தரப்படுத்தலில், உலகத் தரப்படுத்தலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள அனைத்து வீராங்கனைகளும் பங்குபற்றுவதால், முன்னணித் தரப்படுத்தல்கள், உலகத் தரப்படுத்தல்களுக்கு நிகராகவே அமைந்துள்ளன. இதன்படி செரினா வில்லியம்ஸ், கார்பைன் முகுருஸா, அக்னியஸ்கா ரட்வன்ஸ்கா, அங்கெலிக் கேர்பர், சிமோனா ஹலெப், விக்டோரியா அஸரெங்கா, பெலின்டா பென்சிச், வீனஸ் வில்லியம்ஸ், மடிசன் கீஸ் ஆகியோர் முதல் 10 இடங்களில் காணப்படுகின்றனர்.
தரப்படுத்தலிலும் உலகத் தரப்படுத்தலிலும் முதலிரு இடங்களை வகிக்கும் நொவக் ஜோக்கோவிச், செரினா வில்லியம்ஸ் இருவருமே, விம்பிள்டன் போட்டிகளின் நடப்புச் சம்பியன்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago