Shanmugan Murugavel / 2016 நவம்பர் 13 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, வெற்றி - தோல்வியின்றி நிறைவுபெற்றுள்ளது. ராஜ்கோட்டில் இடம்பெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்திய நிலையிலேயே இம்முடிவு பெறப்பட்டது.
விக்கெட் இழப்பின்றி 114 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றைய 5ஆவது நாளை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தியது. இதில் அணித்தலைவர் அலஸ்டெயர் குக், தனது 30ஆவது சதத்தைப் பூர்த்திசெய்து, அதிக சதம் பெற்றோர் பட்டியலில் சேர் டொன் பிரட்மனை முந்தினார்.
ஏறத்தாழ 50 ஓவர்களில் 310 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 52.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, போட்டி முடிவுக்கு வந்தது. ஒரு கட்டத்தில், 6 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களுடன் காணப்பட்ட இந்திய அணி, 10 ஓவர்கள் வரையில் துடுப்பெடுத்தாட வேண்டியிருந்தது.
இப்போட்டியின் நாயகனாக, இங்கிலாந்து சார்பாக சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய மொய்ன் அலி தெரிவானார்.
இரு அணிகளுக்குமிடையிலான 2ஆவது போட்டி, விசாகப்பட்டினத்தில் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
ஸ்கோர் விவரம்
இங்கிலாந்து: 537/10 (பென் ஸ்டோக்ஸ் 128, ஜோ றூட் 124, மொய்ன் அலி 117, ஜொனி பெயர்ஸ்டோ 46 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 3/86, மொஹமட் ஷமி 2/65, உமேஷ் யாதவ் 2/112, இரவிச்சந்திரன் அஷ்வின் 2/167)
இந்தியா: 488/10 (முரளி விஜய் 126, செற்றேஸ்வர் புஜாரா 124, இரவிச்சந்திரன் அஷ்வின் 70, விராத் கோலி 40, ரிதிமான் சகா 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் றஷீட் 4/114, ஸபார் அன்சாரி 2/77, மொய்ன் அலி 2/85.)
இங்கிலாந்து: 260/2 (அலஸ்டெயர் குக் 130, ஹசீப் ஹமீட் 82, பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: அமித் மிஷ்ரா 2/60)
இந்தியா: 172/6 (விராத் கோலி ஆட்டமிழக்காமல் 49, இரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 32, இரவிச்சந்திரன் அஷ்வின் 32, முரளி விஜய் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் றஷீட் 3/64).
27 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
8 hours ago