2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வெற்றியை நோக்கி இலங்கை ஏ

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 06 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கும் இலங்கை ஏ அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இடம்பெற்று வருகிறது. இப்போட்டியின் மூன்றாம் நாள் முடிவில், இலங்கை ஏ அணி, வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

110 ஓட்டங்களால் பின்னிலை வகித்த நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணி, இன்றைய நாள் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இதன்படி, ஒரு விக்கெட் கைவசமுள்ள நிலையில், வெறுமனே 55 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது. துடுப்பாட்டத்தில் விஷால் சிங் 46, குடகேஸ் மோட்டி 34, ஷமர் புரூக்ஸ் 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் லக்‌ஷான் சந்தன் 3 விக்கெட்டுகளையும் அசித்த பெர்ணான்டோ, அசேல குணரட்ன, சரித் அசலங்க மூவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முன்னதாக, 8 விக்கெட்டுகளை இழந்து 348 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த இலங்கை ஏ அணி, 386 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் திமுத் கருணாட்ரண 131, குசல் பெரேரா 87, நிரோஷன் டிக்வெல்ல 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .