2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

விற்றோரிக்கு பந்துவீசத் தடை

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 26 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரயான் விற்றோரி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், 12 மாதங்களுக்கு பந்துவீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விற்றோரியின் சில பந்துவீச்சுகள், மீண்டுமொரு தடவை விதிகளுக்கு புறம்பானமை என்று கண்டுபிடிக்கப்பட்டமையையைத் தொடர்ந்தே அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாண்டுகளில், இரண்டாவது தடவையாக விற்றோரியின் பந்துவீச்சுப்பாணி விதிமுறைகளுக்கு புறம்பானது என்று கண்டுபிடிக்கப்பட்டமையாலேயே வெற்றோரி தடைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

விதிகளுக்கு புறம்பான பந்துவீச்சுப்பாணியைக் கொண்டிருந்தார் என, இவ்வாண்டு பெப்ரவரி மாதம் பந்துவீச தடைவிதிக்கப்பட்ட வெற்றோரி, பந்துவீச்சுப் பாணியை மாற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஜூன் மாதம் பந்துவீச மீண்டும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .