2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

வெளியேற்றப்பட்டது மன்செஸ்டர் யுனைட்டட்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரிலிருந்து, மன்செஸ்டர் யுனைட்டட் அணி அதிர்ச்சிகரமாக வெளியேற்றப்பட்டுள்ளது. வொல்ப்ஸ்பேர்க் அணிக்கெதிரான போட்டியில் அதிர்ச்சிகரத் தோல்வியைத் தழுவியே, அவ்வணி வெளியேற்றப்பட்டது.

ஜேர்மனியின் வோக்ஸ்வாகன் எரினா மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் வெற்றிபெறுவது, சம்பியன்ஸ் லீக் தொடருக்கான இறுதி 16 அணிகளுள் ஒன்றாக மன்செஸ்டர் யுனைட்டட் அணியை நிலைநிறுத்தும் என்ற நிலை காணப்பட்டது.

இந்நிலையில். போட்டியின் ஆரம்பத்திலிருந்து, ஒருவிதமான தடுமாற்றத்தை யுனைட்டட் வெளிப்படுத்தியிருந்தது. அதன் காரணமாக, போட்டியின் 3ஆவது நிமிடத்தில் வொல்ப்ஸ்பேர்க் அணியின் அன்ட்ரே ஷூர்லேக்கு வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும், அந்த வாய்ப்பை அவர், கோல் கம்பத்துக்கு மேலாக பந்தை அடித்து, தவறவிட்டிருந்தார்.

அதன் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மன்செஸ்டர் யுனைட்டட் அணி, போட்டியின் 10ஆவது நிமிடத்தில், கோலொன்றைப் பெற்றது. டேலி பிளைன்ட் வழங்கிய பந்தை இலாவகமாகத் திருப்பிய மாட்டா, அதை மார்ஷியலுக்கு வழங்கினார். மார்ஷியல் அதை, கோலாக்கினார். தொடர்ந்து 13ஆவது நிமிடத்தில், கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திய நால்டோ, 1-1 என்ற கணக்கில் கோல் எண்ணிக்கையை மாற்றினார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வொல்ப்ஸ்பேர் அணி, 29ஆவது நிமிடத்தில், அற்புதமான கோலொன்றைப் பெற்றுக் கொடுத்தது. அவ்வணியின் வியரின்ஹோ பெற்றுக் கொடுத்த அந்தக் கோல், யுனைட்டட் அணியின் தடுப்பாளர்களை ஏமாற்றி, கோலாகியது. அதன் பின்னர் கோல்கள் பெறப்படாத நிலையில். 2-1 என்ற கோல் கணக்கில் வொல்ப்ஸ்பேர்க் முன்னிலை வகிக்க. முதற்பாதி முடிவடைந்தது.

இரண்டாவது பாதியில் ஆரம்பத்தில், மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் ஜுவான் மாட்டா, கோலொன்றைப் பெற்றதாக எண்ணப்பட்ட போதிலும், ஓப் சைட் என அறிவிக்கப்பட்டது.

போட்டியின் 82ஆவது நிமிடத்தில், ஜோஷூவா குய்லவோலகியில் பட்டு, ஒவ்ண் கோலாகியது. இதனால், 2-2 என கோல் எண்ணிக்கை மாற, யுனைட்டட் அணிக்கு நம்பிக்கை பிறந்தது.

ஆனால், இரண்டே நிமிடங்களில் பதிலடி வழங்கிய வொல்ஸ்பேர்க் அணி, 3-2 என கோல் நிலையை மாற்றியது. போட்டியில் தனது இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தே, தனது அணிக்கான முன்னிலையையும் வெற்றியையும், நல்டோ பெற்றுக் கொடுத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .