Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (05) நடைபெற்ற வலென்சியாவுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தோற்றது.
மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை வின்ஷியஸ் ஜூனியர் பெற்றதோடு, வலென்சியா சார்பாக மூக்தார் டியகபி, ஹுயூகோ டுரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றார்.
இதேவேளை தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை நடைபெற்ற றியல் பெட்டிஸுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா சமப்படுத்தியது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை கவி பெற்றதோடு, பெட்டிஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை நடான் பெற்றிருந்தார்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 67 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பார்சிலோனா காணப்படுகின்றது. 63 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட்டும், 57 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும், 53 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிக் பில்பாவோ நான்காமிடத்தில் காணப்படுகின்றது. இதில் பார்சிலோனாவும், றியல் மட்ரிட்டும் மற்றைய அணிகளை விட ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
32 minute ago
2 hours ago
3 hours ago