2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வி.எஃப்.எல் போச்சுமிடம் தோற்ற பயேர்ண் மியூனிச்

Mithuna   / 2024 பெப்ரவரி 19 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லிகா தொடரில், வி.எஃப்.எல் போச்சுமின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் தோற்றது.

மியூனிச் சார்பாக, ஜமால் முசியாலா, ஹரி கேன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். போச்சும் சார்பாக தகுமா அஸானோ, கெவென் ஸ்கொல்லெட்டர்பெக், கெவின் ஸ்டொகர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 58 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பயேர் லெவர்குசன் உள்ளது. 50 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மியூனிச்சும், 46 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் வி.எஃப்.பி ஸ்டட்கார்ட்டும், 41 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் பொரூசியா டொட்டமுண்டும் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X