Editorial / 2017 நவம்பர் 22 , பி.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கு அவுஸ்திரேலியா தகுதி பெற்று ஆறு நாட்களில், அவுஸ்திரேலிய தேசிய கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் இஞ் பொஸ்டாகுகு, தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
உலகக் கிண்ணம் வரையாவது பயிற்றுவிப்பாளராகத் தொடருவதற்கான புதிய ஒப்பதமொன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இஞ் பொஸ்டாகுகுக்கு அளிக்கப்பட்டிருந்தபோதும் தனது பதவியை இராஜினாமா செய்ய இஞ் பொஸ்டாகுகு தீர்மானித்திருந்தார்.
ஹொல்கர் ஒஸெய்க்கிடமிருந்து, 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியைப் பொறுப்பேற்றிருந்த இஞ் பொஸ்டாகுகு, 2015ஆம் ஆண்டில் ஆசியக் கிண்ணம் வரை அவுஸ்திரேலியாவை அழைத்துச் சென்றிருந்தார். இஞ் பொஸ்டாகுகுவின் பயிற்றுவிப்பின் கீழ் 49 போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலியா, 22 போட்டிகளில் வென்றிருந்தது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago