2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

வென்ற இலங்கையின் புத்தளம் வீரர்கள் கௌரவிப்பு

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 22 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

கொழும்பில் நடைபெற்ற ஆறாவது தெற்காசிய ஸெபக்தக்ரோ சம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெற்றிகொண்ட இலங்கை தேசிய ஸெபக்தக்ரோ அணியில் விளையாடும் புத்தளம் ஸெபக்தக்ரோ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஆட்ட வீரர்களை வரவேற்கும் நிகழ்வு புத்தளம் பெரியபள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

புத்தளம் ஸெபக்தக்ரோ அணி முகாமையாளர் ஷிப்லி மர்ஜானுடன் இலங்கை தேசிய ஸெபக்தக்ரோ அணியில் விளையாடிய புத்தளம் வீரர்கள் பெரியபள்ளி நிர்வாகம் மற்றும் ஜமாஅத்தார்களால் பாராட்டி வரவேற்கப்பட்டனர்.

புத்தளத்தில் ஸெபக்தக்ரோ விளையாட்டை வளர்ப்பதற்காக புத்தளம் பெரியபள்ளியால் மேற்கொள்ளக் கூடிய முன்னெடுப்புக்கள் குறித்து புத்தளம் பெரியபள்ளி நிர்வாகத்துடனான கலந்துரையாடலும் இதன்போது நடைபெற்றது. இந்த போட்டிக்குச்  செல்லும் வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வும் புத்தளம் பெரிய பள்ளியில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இற்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர், புத்தளம் மலே அமைப்பால் புத்தளம் நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஸெபக்தக்ரோ விளையாட்டு, ஒரு தசாப்த காலத்தில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடும் வீரர்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X