Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 01 , பி.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற லெகனிஸுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட நான்கு கோல்களையும் அன்டோனி கிறீஸ்மன் பெற்றார்.
இந்நிலையில், இப்போட்டியின் முடிவில் லா லிகா புள்ளிகள் பட்டியலில் 61 புள்ளிகளைப் பெற்றுள்ள அத்லெட்டிகோ மட்ரிட் தரவரிசையில் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. அத்லெட்டிகோ மட்ரிட்டை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள பார்சிலோனா 65 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகின்றது.
இச்சந்தர்ப்பத்தில், பார்சிலோனாவின் மைதானத்தில், இலங்கை நேரப்படி நாளை மறுதினம் 8.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் பார்சிலோனாவை அத்லெட்டிகோ மட்ரிட் எதிர்கொள்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025