Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 06 , பி.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில் பொலொக்னா அணியை ஜுவென்டஸ் வென்றது.
இப்போட்டியின் 30ஆவது நிமிடத்தில், பொலொக்னா அணியின் லொரென்ஸோ கிறைஸ்டிக்கை தமது பெனால்டி பகுதிக்குள் ஜுவென்டஸின் டானியல் ருகனி வீழ்த்தப்பட வழங்கப்பட்ட பெனால்டியை சிமோனே வேர்டி கோலாக்க பொலொக்னா அணி முன்னிலைப் பெற்றது. இதையடுத்து முதற்பாதியில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தும் வாய்ப்புகளை ஜுவென்டஸின் குவாடோ அஸமோகா, கொன்ஸலோ ஹியூகைன் ஆகியோர் கொண்டிருந்தபோதும் அவர்கள் கோல்களைப் பெறாத நிலையில், முதற்பாதியை முன்னிலையுடன் பொலொக்னா அணி முடித்துக் கொண்டது.
தொடர்ந்த இரண்டாவது பாதியில், பொலொக்னா அணியின் வீரர் செபஸ்டிய டி மையோ தனது அணியின் கோல் கம்பத்துக்குள்ளேயே போட்டியின் 51ஆவது நிமிடத்தில் பந்தைச் செலுத்த கோல் எண்ணிக்கை சமமானது. இதையடுத்து, பொலோக்னா அணியில் எமில் கிராப்த்தின் உதையொன்றை ஜுவென்டஸின் கோல் காப்பாளராக ஜல்லூயிஜி புபான் தடுத்திருந்தார்.
தொடர்ந்த ஆட்டத்தில், ஓவ்ண் கோல் பெறப்பட்ட 12ஆவது நிமிடத்தில், கோல் கம்பத்துக்கு அருகிலிருந்து சமி கெதீரா பெற்ற கோலால் முன்னிலை பெற்ற ஜுவென்டஸ், அடுத்த ஆறாவது நிமிடத்தில் போலோ டிபாலா பெற்ற கோலோடு இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago