Editorial / 2018 மார்ச் 15 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற அங்கேர்ஸ் அணியுடனான போட்டியில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.
இப்போட்டியின் 12ஆவது நிமிடத்தில், பரிஸ் ஸா ஜெர்மைனின் ஜூலியான் ட்ரெக்ஸ்லர் வழங்கிய பந்தை கோலாக்கிய கிலியான் மப்பே தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார். தொடர்ந்து, போட்டியின் 25ஆவது நிமிடத்தில் அஞ்சல் டி மரியாவிடமிருந்து பெற்ற பந்தை கிலியான் மப்பே கோலாக்க பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்னிலை அதிகரித்தது. தொடர்ந்து அங்கேர்ஸ் அணியின் கார்ல் டொகோ எகம்பி போட்டியின் 75ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றபோதும் போட்டி முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.
இப்போட்டியின் முடிவில் லீக் 1 புள்ளிகள் பட்டியலில் 80 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் பரிஸ் ஸா ஜெர்மைன் காணப்படுகின்றது. பரிஸ் ஸா ஜெர்மனை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள மொனாக்கோ 63 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago