Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 02 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சுக் கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் வெளியேற்றப்பட்டது.
தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற நீஸுடனான விலகல் முறையிலான இத்தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான போட்டியில் தோற்றே பரிஸ் ஸா ஜெர்மைன் வெளியேற்றப்பட்டது.
இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாமல் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் காணப்பட்ட நிலையில், பெனால்டியில் 6-5 என்ற ரீதியில் நீஸ் வென்றிருந்தது.
பரிஸ் ஸா ஜெர்மைனில், லியனல் மெஸ்ஸி, கிலியான் மப்பே, ஜூலியன் ட்ரெக்ஸ்லர், மார்கோ வெராட்டி, ஜுவான் பேர்னார்ட் ஆகியோர் பெனால்டிகளை உட்செலுத்திய நிலையில், லியன்ட்ரோ பார்டெஸ், ஸ்கெவி சிமொன்ஸின் பெனால்டிகளை பரிஸ் ஸா ஜெர்மைனால் கடனடிப்படையில் நீஸுக்கு வழங்கப்பட்ட கோல் காப்பாளர் மார்சின் புல்கா தடுத்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .